திங்கள், 3 அக்டோபர், 2016

6 மாத காத்திருப்பு விதிமுறையை தளர்த்தி தம்பதிக்கு விவாகரத்து அளித்த உச்ச நீதி மன்றம்

இந்து திருமண சட்டம்-1955 வருட சட்டம் பிரிவு 13(B ) கீழ் , தம்பதி இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தால்[ Divorce by mutual consent-பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து ], அவர்கள் விவாகரத்து பெற ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்று  பிரிவு 13(B-2 )கூறுகிறது,

இந்  நிலையில் விவாகரத்து கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தம்பதி தாக்கல் செய்த மனுவில்  கடந்த, 2010ல் எங்களுக்கு திருமணம் நடந்தது; சில நாட்களே சேர்ந்து வாழ்ந்தோம். அதன்பின் பிரிந்து வாழ்ந்த எங்களுக்கு இடையே பல்வேறு கிரிமினல் வழக்குகள் தொடர்ந்தோம். இவ்வழக்குகள் நீண்ட காலமாக நடக்கின்றன; இவை அனைத்தையும் வாபஸ் பெறுகிறோம்.

இனி, சேர்ந்து வாழ விரும்பாததால், நீண்ட காலமாக, எங்களுக்கு இடையே வழக்குகள் நடந்து வருவதை கருத்தில் வைத்து, விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள்  நீண்ட காலம், சட்ட பிரச்னையில் சிக்கித் தவித்துள்ளனர். தற்போது, பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தி, விவாகரத்துக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதன், 28 செப்டம்பர், 2016

Judgments on Marriage-திருமணம் சம்பத்தப்பட்ட தீர்ப்புகள்.....

18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணிற்கும் , 21வயதுக்கு கீழ் உள்ள ஆண்ணிற்கும் திருமணம் நடந்தால் அவை சட்டப்படி செல்லாது ,ஆனாலும் அத்திருமணணத்தை ,தக்க நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிருபித்து தீர்ப்பு பெற்றால் மட்டுமே  அத்திருமணம் செல்லாததாகும்.-மதுரை உயர் நீதிமன்றம்